காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.சோனை இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கம் பெற்றார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.சோனை அவர்கள் 28.05.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மெச்சத்தக்க பணிபுரிந்தமைக்காக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கம் பெற்றார்.இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களிடம் வழங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.இதேபோல் மேலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு பதக்கங்களை பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
CATEGORIES தென்காசி
