BREAKING NEWS

அந்தியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்கள் கைது.

அந்தியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்கள் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணவில்லை என அவரது பெற்றோர் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர் இந்நிலையில் மாணவியை கொமராயனூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் அவரது அண்ணன் குமரேசன் ஆகியோர் கடத்திச் சென்றது தெரியவந்தது உடனடியாக அண்ணாதுரை மற்றும் குமரேசன் மீது வெள்ளித் திருப்பூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )