தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு.

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு. பொது மக்களிடம் குறைகளை கேட்டரிந்தார்.
குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை ஏற்று டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வார 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது 683 பணிகள் 4965 கிலோமீட்டர் நடைபெறுகிக்ஷது..

இதில் தஞ்சை மாவட்டத்தில் 21 கோடி ரூபாயில் 170 பணிகள் 1456 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் நீர் இருப்பு 117 அடியை தாண்டியதால் ஜூன் மாதத்திற்கு முன்பாகவே மேட்டூர் அணை கடந்த 24ஆம் தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் திறந்து விட்டார். தண்ணீர் திறந்து விட்ட நிலையில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை புதுக்கோட்டை அரியலூர் கடலூர் மாவட்டத்தில் 3.38 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு. பாசனத்துக்காக கல்லணை கடந்த 27தேதி திறக்கப்பட்டது.

தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார கூடிய பணி மற்றும் புனரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆறுகளிலும் வாய்க்காலையும் முழுமையாக தூர்வாரும் பணி மேற்கொண்டு கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடையும் வகையில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்காததால் மட்டுமே முழுமையான சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியை இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த கொக்கேரி கிராமத்தில் உள்ள பீமனோடை 14.50 லட்சம் மதிப்புள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அமைப்புக்கள் அன்பில் மகேஷ், நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு முதன்மை செயலாளர் சந்திப்சக்சேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆய்வு முடித்து வேளாங்கண்ணி செல்லும் அவர் நாளை நாகை திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சை திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வினை மேற்கொள்ள உள்ளார்.
