கூகலூரில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூகலூரில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புத்தகம், எழுது பொருட்களை வழங்கினார்.
ஈரோடுமாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூகலூர் பேரூராட்சியில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார் இதனையடுத்து திமுக இளைஞரணி சார்பில் 100க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட் புத்தகங்கள், பென்சில், பேனா, உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார் தொடர்ந்து பேரூராட்சியில் மரகன்று நட்டு, தூய்மை பணியாளர்களுக்கு இலவச அரிசி, உணவு, வழங்கினர்.

நிகழ்ச்சியில் கூகலூர் பேரூராட்சி தலைவர் மா.ஜெயலட்சுமி, பேரூராட்சி து.தலைவர் ராஜாராம், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், 9வார்டு கவுன்சிலர் மலர்கொடி, திமுக இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகிரிசாமி, சவுண்டப்பூர் சுரேஷ், தண்ணீர்பந்தல்புதூர் பழனிசாமி, 4வது வார்டு செயலாளர் ரமேஷ், கணபதிபாளையம் கார்த்திகேயன், பொலவக்காளிபாளையம் பிரவின், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
