விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு , அதன்படி கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதியுடன் பொதுத்தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கும் போதுமான ஆசிரியர்கள் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
