பட்டிவீரன்பட்டி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பலி. இன்னொரு மாணவன் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யன்கோட்டையில் இருந்து இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேர் காரில் மருதாநதி டேமை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டு திரும்பி வரும்போது காரை பரத்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார் வரும் வழியில் மருதாநதி ரோட்டில் ஒத்தக்கடை என்னுமிடத்தில் வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் ராகேஷ் வயது 11,ரக்ஷன் வயது 9 இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராக்கேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ரக்சன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த ராகேஷ் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6ம் வகுப்பு மாணவன் விபத்தில் இறந்தது. அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
