BREAKING NEWS

கல்லிடைக்குறிச்சியில் வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ ) அலுவலக பணியை விரைந்து துவங்க அனைத்து கட்சியினர் நினைவூட்டல் மனு.

கல்லிடைக்குறிச்சியில் வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ ) அலுவலக பணியை விரைந்து  துவங்க அனைத்து கட்சியினர் நினைவூட்டல் மனு.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவிற்குட்பட்ட கல்லிடைகுறிச்சி பகுதியில், வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) அலுவலகம் சிங்கம்பட்டியில் செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தமையால், கடந்த வருடம் ஜூன் மாதம் ஜமாபந்தி அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட, மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி ,வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ ) அலுவலகம் கல்லிடைக்குறிச்சி கிராமம்-1 பகுதியில், சர்வே எண் 131 இல் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி, ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆணை பிறப்பித்து, இடம் ஒதுக்கப்பட்டு ஒரு வருட காலங்கள் ஆகியும், தற்போது வரை அதற்கான எந்த ஆயத்தப் பணியும் நடைபெறவில்லை. உடனடியாக வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ ) அலுவலக கட்டுமான பணியை துரிதமாக துவங்கி, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல், இலகுவாக அமைவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து கட்சியினர் சார்பாக நினைவூட்டல் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அம்பை ஜலீல், அகில இந்திய மனித உரிமை கழகம் நகர தலைவர் முருகன் மற்றும் மாவட்ட ஆலோசகர் பொன்னுச்சாமி, காங்கிரஸ் கமிட்டியின் நகர தலைவர் கை கொண்டான், நகர செயலாளர் கே.எஸ் ஹமீத், தேமுதிக நகர தலைவர் அம்ஜத் அலி, மதிமுக ஒன்றிய துணை செயலாளர் கிட்டு பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )