முசிறியில் வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து கரூர் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி அருகே கரூர் டெக்ஸ்டைல்ஸ் வேலை செய்ய ஆட்களை அழைத்துச் சென்ற பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
அதிஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கரூர் நகரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் ஒன்றில் வேலை செய்வதற்காக முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெண்களை கூலி வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக நிறுவனத்தின் வேன் வருவது வழக்கம் .வழக்கம்போல முசிறி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்களை அழைத்துக் கொண்டு கரூர் நோக்கி வேன் சென்றுள்ளது. முசிறி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள மலையப்ப புறம் சுடுகாடு அருகே சென்றபோது முன்னால் சென்ற வேனை முந்திச்செல்ல முற்பட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர். அப்பகுதி வழியாக சென்றவர்கள் 108ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்னர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரண்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 13 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
