BREAKING NEWS

கல்லூரி மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக இருக்க வேண்டும்

கல்லூரி மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக இருக்க வேண்டும்

கல்லூரி மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக இருக்க வேண்டும் என்று சத்தான உணவுகளை உட்கொள்வதில்லை உடல் வளர்ச்சி குறைந்து கற்பை வளர்ச்சி என்பது இல்லாமல் போய் விடுகிறது என கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் வேதனை….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி கூட்டரங்கில் வைத்து பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைக் பாது காப்பது குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

அப்போது பேசுகையில் அவர் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் பெண்கள் தங்கள் திருமண வயதை கடந்த பின்பு அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும், கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் அப்போதுதான் கருவுற்ற தாய்மார்களின் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து அறிவு சார்ந்த குழந்தைகளாக வளரும்,

தமிழகத்தில் 3 வயதிற்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்

மிக வேதனைக்குரிய விஷயம் என்று பார்க்கப்படுவது என்னவென்றால் கல்லூரி செல்லக்கூடிய பெண்கள் உடல் எடை அதிகரிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பதில்லை இதனால் அவரின் கர்ப்பை வளர்ச்சி பாதிப்படைய கூடும் என்று வேதனையுடன் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி நகராட்சி ஆணையாளர் ராஜாராம்,சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன்.பெண்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் வழக்கறிஞர் சொர்ணலதா, உதவி பேராசியர் குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம் காமராஜர் கல்லூரி ஜான் மோசஸ் கிரிதரன், மாவட்ட சமூக அலுவலர் ரதிதேவி, குழந்தை நலக் குழு உறுப்பினர் அழகு சுந்தர்ராஜ், சைல்டு லைன் இயக்குனர் மன்னர் மன்னன், சைல்டு லைன் குழு உறுப்பினர் ராமலட்சுமி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )