திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்த மத்திய பிரதேச வாலிபர் தண்ணீரில் முழ்கி பலி
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்த மத்திய பிரதேச வாலிபர் தண்ணீரில் முழ்கி பலி.
அஜிஷ் ஜாம்ரா வயது 23,
S/o கரம்சிங் ஜாம்ரா
மத்திய பிரதேஷ்.
கூடங்குளம் அணுமின் நிலையம் 3&4 -ல் Trg. Executive officer ஆக கடந்த ஒன்றரை மாதங்களாக வேலை பார்த்து வந்த அஜஷ் ஜாம்ரா செட்டிகுளம் டவுன்ஷிப் உள்ளே உள்ள நீச்சல் குளத்தில் 7 மணி அளவில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி உள்ளார். அவர் நண்பர்கள் அவரை காப்பாற்றி டவுன்ஷிப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்து விட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகிறார் வாலிபர் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.