BREAKING NEWS

திமுகவின் தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் சுவராசியமாக இருக்கும் என கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

திமுகவின்  தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் சுவராசியமாக இருக்கும் என கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

கும்பகோணத்தில் பாரதிய ஜனதா சார்பில் எட்டு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோழராஜன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது;-

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது கும்பகோணத்தை ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மாவட்டமாக மாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் 400 நாட்கள் கடந்தும் மாவட்டமாக அறிவிக்கவில்லை.
எப்பொழுது கும்பகோணத்தை மாவட்டமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார் என்றால் உடனடியாக மத்திய அரசிடம் பேசி கும்பகோணத்தை ஆன்மீக மாவட்டமாக மத்திய அரசு அறிவித்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை கொண்டுவருவது தமிழக பாஜகவின் பொறுப்பு. இந்தியாவிலேயே ஆன்மீக மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றால் அது கும்பகோணம் மாவட்டமாக தான் இருக்கமுடியும்.
ஆனால் தமிழக அரசு மாவட்டமாக அறிவிக்க முன்வரும்போது பல ஆயிரக்கணக்கான ஏக்கரை திமுகவினர் தன்வசப்படுத்தி அதன்மூலம் வருமானத்தை பெறக்கூடிய திட்டமாகத் தான் இருக்கும்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )