பெரியகூத்தூரில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே பெரியகூத்தூரில் இஸ்லாமியர்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

பெரியகூத்தூர் ஜாமிஆ மஸ்ஜித்
பள்ளிவாசல் முன்பு இமாம் பைஜுர் ரஹ்மான் தலைமையில் ஜமாத்தார்கள் உமர் பாருக், அசாருதீன், சிராஜுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகவும், டெல்லி பாஜகவை சேர்ந்தார் நவீன்குமார் ஜிண்டால் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நபிகள் நாயகத்தை குறித்து தவறாக கருத்துகளை பதிவிட்ட பாஜக நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சமூக நல்லிணக்க தலைவர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான், தரங்கம்பாடி பள்ளிவாசல் துணைத்தலைவர் பாவாசா அகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆக்கூர், சங்கரன்பந்தல், தரங்கம்பாடி முஹையதீன் ஆண்டவர் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் முன்பு இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படவிளக்கம்: பொறையாறு அருகே பெரியகூத்தூர் பள்ளிவாசல் முன்பு நபிகள் நாயகத்தை பற்றி தவறாக கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகிகளை கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
