கோவில்பட்டி அருகே கருவாடு குடோனில் திடீர் தீ விபத்து- தீயணைப்புத் துறையினர் 3 வாகனத்தில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்தவர் அந்தோணி என்பவருக்கு சொந்தமான கருவாட்டு குடோன் சிவந்திப்பட்டியில் உள்ளது.


இக் குடோனில் கருவாடுகளை அரைத்து கோழிகளுக்கு தீவனமாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று கருவாடுக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு கட்டிடங்கள் முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதம் ஆகியது மேலும் குடோனில் இருந்த காடுகள் அனைத்தும் தீயில் கருகியதால் பல பல லட்சம் மதிப்பில் மதிப்புள்ள சேமித்து வைக்கப்பட்டிருந்த கருவாடுகள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது. மேலும் கட்டிடங்கள் அனைத்தும் முழுவதும் சேதமானது சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மற்றும் கழுகுமலை விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் மூன்று வாகனங்களில் வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
