BREAKING NEWS

பூக்களை சாலையில் கொட்டி விவசாயிகள் கண்ணீர்.

பூக்களை சாலையில் கொட்டி விவசாயிகள் கண்ணீர்.

நெல்லை ராமையன்பட்டி அருகே உள்ள கால்நடை மருத்துவமனை அருகே உள்ள சாலையில் மானூர் பள்ளமடை லட்சுமியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பூக்களுக்கு சரியான விலை கிடைக்காததால் சாலையில் கொட்டி கண்ணீர் விட்டனர்.

இது குறித்து அவர்களிடம் கேட்கும் போது

நாங்கள் அனைவரும் சாதாரண விவசாயிகளே அனைவரும் கடன்களை வாங்கி தான் விவசாயம் செய்து வருகிறோம் விவசாயத்தை நம்பி தான் எங்களின் குடும்பம் உள்ளது.

எங்கள் விவசாய நிலங்களில் பயிர் செய்து கிடைத்த பூக்களின் விலையினை சந்தையில் கிலோ 10 க்கும் குறைவாக வியாபாரிகள் கேட்பதால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது,இதனால் போட்ட முதலை கூட எங்களால் எடுக்க முடியாமல் பண நெருக்கடிக்கு ஆளாகுகின்றோம்,இதனால் மிகுந்த வருத்ததுடன் இருக்கிறோம்.

இன்னும் 5 வருடங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு முழுமையாக இந்த விவசாயம் சென்றுவிடம் அதன் பின்னர் விவசாயிகள் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையேந்தும் சூழ்நிலை வரும் என்றும் அதன் பின்னரே விவசாயிகளைப் பற்றி அருமை பலருக்கும் அறிய வரும் என்றும்,ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளை காப்போம் என்றார் தவிர எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் உருக்கமாக தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )