ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பரவலான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
