BREAKING NEWS

சர்வதேச யோகா தினத்தில் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மத்திய அமைச்சர் அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்பு.

சர்வதேச யோகா தினத்தில் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மத்திய அமைச்சர் அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்பு.

எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் மத்திய கல்வி துறை இணை அமைச்சர் அன்னபூரணி தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகாசனம் செய்து சூரிய நமஸ்காரம் செய்தனர். இதில் கலந்து கொண்டவருக்கு யோகா செய்வதன் நன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின்பு பேட்டி அளித்த அவர் பிரதமரின் முயற்சியால் எட்டாவது யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது தஞ்சை பெரிய கோவிலில் யோகா செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )