BREAKING NEWS

மத்திய அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருச்சி திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருச்சி திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அறிவிப்புக் கிணங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது.

இந்தஆர்ப்பாட்டத்திற்குதெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தெற்கு ஒன்றிய தலைவர் ரகுவரன், துவாக்குடி நகர தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசையும் அமலாக்கத் துறையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )