உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை!

உடுமலை அரசு கலை கல்லூரியில் 2022-2023 ம் கல்வியாண்டி ற் குரிய இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணைய தளத்தின் வாயிலாக வருகிற ஜூன் 27 ம் தேதி முதல் ஜூலை 15 ம் தேதி வரை விண்ணப்பிக் கலாம்.
தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் முதலான விவரங்களை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தான் சேர விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்து அந்தக் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம். ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதுமானது.
ஆனால், ஒன்றிற்கு மேற்பட்ட கல்லூரியைத் தேர்வு செய்யும்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதலாகப் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 48, பதிவுக்கட்டணம் ரூ2.00 மொத்தம் ரூ50 (ஐம்பது மட்டும்)ஐ Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையவழியில் செலுத்தலாம்.
SC/SCA/ST பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ2.00 மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளில் சேரவிருக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் ஐயமிருப்பின் கல்லூரிவளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம்.
