முத்தமிழறிஞர் கலைஞரின 99 -வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளரும், மாநகர துணை மேயருமான டாக்டர்.அஞ்சுகம் பூபதி ஆதரவற்றோர் பள்ளி மாணவிகளுக்கு பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞரின் 99 -வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளரும், மாநகர துணை மேயருமான டாக்டர்.அஞ்சுகம் பூபதி, ஏற்பாட்டில் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள கில்ட் ஆப் சர்வீஸ் ஆதரவற்றோர் பள்ளி மாணவிகளுக்கு பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திமுக மாநகர துணைச்செயலாளர் நீலகண்டன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சண்முக சுந்தரம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கமலா ரவி, ஆதிதிராவிடர் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மாநகராட்சி உறுப்பினர் உஷா மற்றும் மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று உணவுகளை வழங்கினர்.
