BREAKING NEWS

சத்தியமங்கலம் யோகா தவமையம் நடத்திய சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி.

சத்தியமங்கலம் யோகா தவமையம் நடத்திய சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி.

சத்தியமங்கலம் யோகா தவமையம் நடத்திய சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி இன்று மனவளக்கலை யோகா மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிவில் சர்வீஸ் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட்டின் முதல்வர் டாக்டர் ஜி என் தேவராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அருட்செல்வர் கே.சரவணன் அருட்செல்வர் முருகன்(தமிழ்நாடு மின்சார வாரியம்) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் எண்ணமங்கலம் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.யோகா பேராசிரியை திருமதி சுமதி அவர்களும் மனவளக்கலை யோகாவின் அனுபவங்களை பேசினார்.நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருள்நிதி சகுந்தலா தேவி அருள்நிதி சைலஜா ஆகியோர் குரு வணக்கமும் இறைவணக்கம் பாட பேராசிரியர் எஸ் விஜயன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.சிறப்புச் சொற்பொழிவுக்கு அடுத்து அருள்நிதி ஜி.நந்தகுமார் அவர்கள் யோகா பயிற்சிகளை செய்முறை விளக்கமாக செய்து காட்டினார்.எட்டாவது உலக சர்வதேச யோகா தினத்தின் இன்றைய நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்கியதோடு நிகழ்ச்சி நிறைவில் அருட்செல்வர் பேராசிரியர் கா அறிவழகன் அவர்கள் நன்றியுரை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் புதுவடவள்ளி வடிவேல் ஆசிரியர் அரசு பள்ளி ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்து 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )