BREAKING NEWS

கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துணைவியார் திருமதி இந்திரா காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துணைவியார் திருமதி இந்திரா காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருக்கோயில் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ துணைவியார் திருமதி இந்திரா காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில், அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா செல்வக்குமார்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி மற்றும் ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயில் நிர்வாகிகள் நடராஜன், ஜெயராம்,சுப்புராம், தாமரைக்கண்ணன், ராமமூர்த்தி, துரை, அர்ச்சகர் முரளிதர ஐயங்கார், மற்றும் இந்திராநகர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )