BREAKING NEWS

பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை படுத்திய மாவட்ட காவல்துறையினர்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வை படுத்திய மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன்படி இன்று மானூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.பழனி, அவர்கள் காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட துலுக்கர்பட்டி அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புகையிலை மற்றும் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு பற்றியும் பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாணவர்கள் ஜாதி ரீதியான உணர்வை தூண்டும் வகையில் கயிறு ஆகியவற்றை பள்ளிக்கு அணிந்து வர கூடாது என்பது பற்றியும்,

பெண்கள் பாதுகாப்பு குறித்தும் , கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுப்பது சம்பந்தமாக முககவசம் அணிவது பற்றியும், சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கும் படியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு இலவச எண்களான 181, 1930 குறித்து விழிப்புணர்வு ஏறபடுத்தினார்‌.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )