BREAKING NEWS

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் வழங்கினார்.

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் வழங்கினார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 14 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீனசெயற்கைக் கால்களை தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் துறையில் வழங்கப்பட்டது.


இதில்‌ ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீனசெயற்கைக் கால்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன . இவற்றையும் சேர்த்து மொத்தம் இதுவரை 135 செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 பேர் கைகளை இழந்தவர்கள். இவர்களுக்கு வழங்கிய செயற்கை கைகள் விரல்களை நீட்டி மடக்கும் படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும். மேலும் 115 நபர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், அரியலூர் ,புதுகோட்டை, திருவாரூர், நாகப்பட்டடினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த செயற்கை கை கால்களில் ஏற்படும் ஏதாவது சிக்கல்களை உடனடியாகத் தீர்க்கவும் முடியும். இந்த செயற்கை கை கால்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

கை கால்களை இழந்த நோயாளிகள் உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை வெளி நோயாளி பிரிவை அணுகலாம். ஊனமுற்றோர் அட்டை இல்லாதவர்களும் கால்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )