தமிழகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம், உரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.25 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தகவல்.

தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 34-ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் 18-வது ரேங்கில் உள்ளது. காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளன. மேலும் இதனை உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 18 டன் காய்கறி கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவைகளை கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காய்கறி கழிவுகளில் இருந்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு திட்டங்களுக்காக சுற்றுச்சூழல் துறைக்கு என்று ரூ.25 கோடியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார்.

உலக நாடுகள் வியக்கும் வகையில் சென்னையில் செஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நிகழ்வு நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த போட்டி ஜூலை 28- ந்தேதி சென்னையில் மாம்பழபுரம் பகுதியில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக 52 ஆயிரம் சதுர அடியில் உலகத்தரம் வாய்ந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியின் நிறைவு விழா ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி நடைபெறுகிறது.

இதில் முதல்வர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும் பரிசுகளையும் வழங்க உள்ளார். தமிழகத்தில் உள்ள கருவேலை மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரி படுகைகளை பாதுகாக்கும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பைகளை ஒலிக்கும் விதமாக, தமிழகத்தில் மஞ்சப்பை செயல்படுத்தப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிளாஸ்டிக் பைகள் 20சதவிதம் ஒலிக்கப்பட்டு உள்ளது. 1.7.2022 முதல் உலகெங்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் முறை தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
