BREAKING NEWS

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைத்தேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர். மாநில செயல் தலைவர் சு.ப.கண்ணன், மாநில இணை பொதுச் செயலாளர் முருகன் தேவர், மாநில துணைத்தலைவர் பாலு தேவர், மாநில இளைஞரணி தலைவர் பாண்டி தேவர், மாநில இளைஞர் அணி செயலாளர் மாடசாமி தேவர், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் மற்றும் கேரள மாநில செயலாளர் பூதப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் எம்.பி.பாண்டியன், மாவட்ட ஐடி விங் தலைவர் இசக்கி, மாவட்ட தலைவர் ஜான்சன், மாவட்ட ஆன்மீக அணி செயலாளர் மாரிமுத்து, குருவிகுளம் ஒன்றிய செயலாளர் பசும்பொன் பாண்டியன், நகர ஐடி விங் செயலாளர் பாண்டி மற்றும் இளைஞரணி சட்டநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுத் குழுவிற்கு கலந்து கொள்ள சென்ற அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வத்தை “தாக்க முயன்று, அவரது காரின் டயரை சேதப்படுத்தி அவமானப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமியின் கோஷ்டியினரையும், அவரையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், 3000 பேர் கொண்ட கட்டத்தில் ஓபிஎஸ்-ற்கு உறுதுணையாக இருந்த மரியாதைக்குரிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு எங்கள் கழகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் எடப்பாடி தலைமையிலான கட்சிக்கு தமிழக முக்குலத்தோர் சமுதாய ஒட்டு மொத்தமாக இல்லாமல் ஆகி விடும் என்றும், இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் எங்கள் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )