BREAKING NEWS

தஞ்சாவூரில் தற்காலிக ஆசிரியர் பணிகள் நிறுத்தி வைப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தஞ்சாவூரில் தற்காலிக ஆசிரியர் பணிகள் நிறுத்தி வைப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தமிழகம் முழுவதும் இடைநிலை/ பட்டதாரி/ முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நியமிப்பதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

பின்னர் இது தொடர்பாக பொதுநல வழக்கு படித்த ஆசிரியர்கள் சார்பாக தொடரப்பட்டது பின்னர் இதுகுறித்து தமிழக அரசு இன்று முதல் வரும் 6ந் தேதி வரை தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இதனையடுத்து தஞ்சாவூரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க வந்த பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சரியான விளக்கம் அளிக்காமல் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர் அதில் தற்காலிக ஆசிரியர் காலி பணியிடங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தடையானை வழங்கப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தற்காலிக ஆசிரியர் தொடர்பாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் வேலைக்கு விண்ணப்பிக்க வந்தோர் ஏமாற்றம் அடைந்து புலம்பினர், அரசு தெளிவான வழிகாட்டுதல்களை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )