திசையன்விளை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திசையன்விளை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திசையன்விளை அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது. அரிமா சங்க தலைவர் தங்கையா கணேசன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர் களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் லயன்ஸ் கவர்னர் சந்திரன் பதவியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார். முன்னாள் மாவட்ட கவர்னர் டி.சுயம்புராஜன் திசையன்விளை அரிமா சங்கத்தில் புதிதாக இணைந்த ரூகன்யா மற்றும் காமராஜ் ஆகியோரை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.
சேவைத்திட்டங்களாக ஏழைப்பெண்ணுக்கு தையல் மெஷின், கல்மாணிக்கபுரம் அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு 3 டெஸ்க் பெஞ்ச், 25 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள்,20, பெண்களுக்கு சேலைகள்,சிறந்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.புதிய தலைவராக ராஜமைக்கேல்,செயலாளராக குருநாதன்,பொருளாளராக லைசாள் எட்வர்டு, இணைசெயலாளராக ராஜ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.
மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் கிருஷ்ணன், மண்டல தலைவர் சுப்பையா,வட்டார தலைவர் ராஜன், உறுப்பினர் சேர்க்கை மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார் கள். நிகழ்ச்சிகளை வீரராஜன்,ராஜா முருகானந்தம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
விழாவில் மாவட்ட தலைவர் கமலா சுயம்புராஜன், வட்டார தலைவர் பாலசிங் தேவதாஸ்,திசையன்விளை அரிமா சங்க உறுப்பினர் கள் திருவடிமுத்து,கார்த்தீச பாண்டியன், பிரம்ம குமார்,ராஜன் மைக்கேல்,ஸ்டார்வின்,ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி,ராஜேந்திரன், ஜி.பி.எம்.குமார், இசக்கி முத்து காந்தன்,சுகந்தி கணேசன்,ஷீலா ஜெனிபர்,திசையன்விளை வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் சாந்தகுமார்,வக்கீல் பழனிசங்கர் , காமராஜர் நற்பணி இயக்க தலைவர் எஸ்.ஜி. ராஜன் மற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
