BREAKING NEWS

தஞ்சை பெரிய கோவிலில் மஹா வாராஹிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம்.

தஞ்சை பெரிய கோவிலில் மஹா வாராஹிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு சிறப்பு  அலங்காரம்.

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இக் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த நாகசுப்பிரமணியன் குடும்பத்தினர் வருடம் தோறும் விநாயகர் முருகர் நந்தி பகவான் வாராஹி பெருவுடையார் பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டு பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் பெரிய நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )