BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இ எம் டி சிஸ்டம் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் மெடிசித் பார்மா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆல் ஹெர்பல்ஸ் டாட் காம் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ரூபாய் 200 கோடி முதலீட்டில் உலக தரம் வாய்ந்த சுகாதார நலம் சார்ந்த தகவல் தொழில்நுட்ப மையம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் அமைக்கப்படவுள்ளது.

இதன் துவக்க விழா நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா மையத்துக்கு அடிக்கல் நாட்டி மரக்கன்றுகள் நட்டினர்.

பின்னர் அந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட உள்ள ஆயுர்வேத மருந்து பொருட்களின் மாதிரிகளை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் இ எம் டி சிஸ்டம் நிர்வாக இயக்குனர் சுந்தர் அழகுராஜ், இயக்குனர் ராஜ்குமார் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )