BREAKING NEWS

லயன் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

லயன் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

திருச்சிராபள்ளி சக்தி லைன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதிவி ஏற்பு விழா சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் லயன் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட ஆளுநர் கார்த்திக்பாபு புதிய நிர்வாகிகளாக தலைவர் கீதா வீரசேகரன், நிர்வாக செயலாளர் சரிதா, சேவை திட்ட செயலாளர் கிருபா, பொருளாளர் நிரஞ்சன் உள்ளிட்டா 14 நிர்வாகிகளை நியமித்து பணியில் அமர்த்தி வாழ்த்துரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில் இந்த சங்கமானது உதவி செய்யும் நோக்கத்துடன் கூடிய அமைப்பாகும். இதில் பொது மக்களுக்கு என்ன என்ன தேவையோ செய்யுங்கள். கல்விக்கு நிறைய நிதி உதவி செய்யுங்கள். இந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும்படியால் இந்த நிகழ்ச்சி என் இதயத்துக்கு நெருக்கமாக பார்க்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட லயன் கீதாவீரசேகரன் ஏற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லைன் சங்கத்தின் நிர்வாகிகள் சிவக்குமார். அம்மு குட்டிபாபு, சதீஷ்குமார், ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )