நெல்லையப்பர் காந்திமதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது .

நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

இக்கோயிலில் தினசரி பூசைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.10 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலமாக இருந்ததால் இரண்டு ஆண்டு இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெறவில்லை தற்போது இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
கடந்த எட்டு நாட்களாக நெல்லையப்பர் கோவிலில் தேரோட்ட நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது ஆயிரம்கனக்கான பொதுமக்கள் தேர் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
