BREAKING NEWS

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக வேண்டி காரைமேடு ஒளிலாயத்தில் குரு பூர்ணிமா பவுர்ணமி யாகம்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக வேண்டி காரைமேடு ஒளிலாயத்தில் குரு பூர்ணிமா பவுர்ணமி யாகம்.

சீர்காழி: மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே காரைமே ட்டில் அமைந்துள்ளது ஒளிலாயம் சித்தர் பீடம்.இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இன்று பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு பவுர்ணமி யாகம் நடைபெற்றது.

முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி.பழனிசாமி நிரந்தர பொது செயலா ளராக பொறுப்பேற்க வேண்டும், அனைத்து வழக்கு களும் நீங்கி இரட்டை இலை மற்றும் கட்சி அலுவலகம் அனைத்தும் பெற்று அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என வேண்டி இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து 108 வேதிகை, மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு பெளர்ணமி யாகம் நடைபெற்று,பூர்ணா ஹூதி, மகா தீபாரதனை கட்டப்பட்டது. யாகத்திற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )