வேலூர் சி.எம் சி மருத்துவமனை கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல்.

வேலூர் மாவட்டம் வேலூர் சரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும். சி.1962. சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் வழங்கும் சங்கத்தில் சுமார் 3 – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் சங்க தலைவராக டி.ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் மருத்துவமனை ஊழியர் அட்டெண்டர். சங்க செயலாளராக டி.ராஜன் பாபு. உதவிச் செயலாளராக முரளி தாஸ் இருவரும் துறையைச் சார்ந்த அரசு ஊழியர்கள். சங்க தலைவருடன் இவர்கள் இருவரும் இணைந்து பதவியேற்ற நாள் முதல் சங்கத்தில் உள்ள பணத்தை முறைகேடாக கையாடல் செய்துவந்தனர்.
இவர்கள் மீது துறைக்கு பல புகார்கள் வந்ததின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு.82 கிழ். ஆய்வுக்கு உட்பட்ட தில் ஆய்வு அறிக்கையில் கூட்டுறவு சங்க சிக்கனம் மற்றும் கடன் செயல்பாடுகலில் சுமார் 10 லட்சத்து 52 ஆயிரத்து 36 ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனை இவர்களிடமிருந்து வசூலிக்கும் பொருட்டு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 87(1)1983 பிரிவின் கீழ் வசூலிப்பதற்கான ஆணை கடிதம் துணைப்பதிவாளரால் ஆணை ந.எண்.1762/2021, 28.10.2021 அன்று ஆய்வு அறிக்கை பெறப்பட்டு 5.4.2022 அன்று துணைப்பதிவாளற்குஅனுப்பப்பட்டு துணைப்பதிவாளர் ந. வ. பிரிவு அலுவலக குறிப்பு எண் 1762/2021.ந.வ.நாள் 27.5.2022. அன்று இணைப்பதிவாளர் மூலம்முறை கேட்டில் ஈடுபட்ட நபர்களிடம் இந்த அறிவிப்பினை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டதற்கான அறிவிப்புஜூன் 21.2022 இன்று அலுவலக முத்திரை யுடன் வழங்கப்பட்டது.

ஆனால் இதுநாள் வரை இணைப்பதிவாளர் ஐய்யப்பதுரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சிஎம்சி கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த முறை கேட்டினால் வருடா வருடம் சங்க உறுப்பினர்கள் செலுத்தும் வைப்பு தொகைக்கு வட்டி. (dividend) ஒவ்வொரு வருடமும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள். பிடித்தம் செய்யும் வைப்புத் தொகைக்கு ஏற்ப 6ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழங்கப்பட்டுவந்தது. இந்த கையாடலினால். கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை. ஆடிட்டிங் செய்ய அலுவலர் வந்தால் சங்க தலைவர் தரக் குறைவாக பேசுவதால் அந்தப் பணியும் நடைபெறுவது கிடையாது.

பதவியில் உள்ள நபர்கள் எந்தெந்த முறையில் பணம் கையாடல் செய்தனர் என்று துறை நிர்வாகம்குறிப்பில் கூறப்பட்டு உள்ளன. 2019 – 2020ஆம் ஆண்டு ஆடிட்டிங்கில். சதிஷ் என்றவர் பெயரில் 06.8.2019 கடன்முடித்து. ரூ.1லட்சம்.ரொக்கம் பெறப்பட்டு வரவு வைக்கப்பட்டு தின பேரேடு பொதுப் பேரேட்டில் வரவு வைக்காமல் கையாடல் செய்யப்பட்டது. பங்காதாயம் சேமிப்புக் கணக்கில் 65 லட்சம் 18 ஆயிரத்து 500 ரூபாய் பெறப்பட்டு. தின பேரேட்டில். பொதுப் பேரேட்டில் வரவு வைக்கப்பட்டு டிவிடெண்ட் வழங்கிய பதிவேட்டில் 62 லட்சத்து 48 ஆயிரத்து 400 வரவு வைக்கப்பட்டு. மீதி. ரூபாய்.2 லட்சத்து 70 ஆயிரத்து 100 ரூபாய் கையாடல் செய்துள்ளனர்.

கணினி மென்பொருள் பெயரில் முறையற்ற செலவினம். ரூபாய்.3 லட்சத்து 60 ஆயிரம் கையாடல். ஒப்பந்தபணியாளர் விஸ்வநாதன் என்பவருக்கு முறையற்றவகையில்.சம்பளமும் வழங்கியது ரூபாய்.85 ஆயிரத்து161 ரூபாய் வழங்கியது. செயலாளர் ராஜன் பாபுக்கு. விடுப்பு வரன்முறை படுத்தாமல். ஜனவரி 2021முதல் ஜு லை2021 வரை சம்பளமாக வழங்கியது என மொத்தம்.10 லட்சத்து52 ஆயிரத்து 36 ரூபாய் கையாடல் நடந்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்ட இவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் துறை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இந்த முறைகேடை போல பாகாயம் சிஎம்சி மருத்துவமனையிலும் கையாடல் முறைகேடு நடந்தது. இதனை விசாரணை நடத்தி அந்தசங்க நிர்வாகம் கலைக்கப்பட்டது.
தற்போது தனி அலுவலர் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. அதேபோல திருட்டு பேர்வழிகள் நடத்திவரும் சிஎம்சி கூட்டுறவு நிர்வாகத்தை கலைத்து. முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள்மீது தமிழக முதல்வர் ஸ்டாலின். கூட்டுறவுத்துறை அமைச்சர். ஐ. பெரியசாமி அவர்களும். நடவடிக்கை எடுப்பார்களா இன்று சங்க உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது.
