BREAKING NEWS

பவானி காமராஜர் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி கல்வி சீர் விழா நடைபெற்றது.

பவானி காமராஜர் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி கல்வி சீர் விழா நடைபெற்றது.

1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான பீரோ, டெஸ்க், சேர், எல்.ஈ.டி. டீவி மற்றும் பல்வேறு பொருட்களை பள்ளி புரவலர்கள், பெற்றோர்கள், நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஈரோடு மாவட்டம் பவானி காமராஜ் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி கல்வி சீர் விழா நடைபெற்றது.

 

 

பவானி கல்வி மாவட்ட வட்டார அலுவலர் ராஜலட்சுமி, எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் மகேஸ்வரி, பவானி நகர்மன்றத் தலைவர் சிந்தூரி, ஆணையாளர் தாமரை உட்பட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இப்பள்ளி மாணவ மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

 

அதேபோல் இப்பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்பில் உறவினர்கள் பெற்றோர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பல வழங்கிய பீரோ எல் இ டி டிவி ஃபேன் டிஸ்க் தூய்மை பணி செய்யும் உபகரணங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் பெற்றோர்கள் கையில் எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், கவுன்சிலர்கள் சிவகுமார், மோகன்ராஜ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள் பள்ளி குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )