அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஈரோடு மாவட்டம்: அந்தியூர் எம் எல் ஏ ஏ.ஜி வெங்கடாசலம் இன்று அந்தியூர் பேருந்து நிலையம் ஈஸ்வரன் கோவில் வீதி பத்ரகாளியம்மன் கோவில் திடல் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் அவர் பொதுமக்களிடம் பேசுகையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார் முன்னதாக சிங்கார வீதி பகுதியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் எம் எல் ஏ ஏ ஜி வெங்கடாசலம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
