காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அவரது திருவுருவப்படத்திற்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் டிஇஎல்சி ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் பி ஷிபா தலைமையில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் பேனா மற்றும் இனிப்புகளும் வழங்கினார் அப்போது தலைமையாசிரியர் எம்எல்ஏவிடம் கோரிக்கையை முன்வைத்தார் ஓட்டு கட்டிடமாக செயல்பட்டு வருகிறது தற்பொழுது அந்தக் கட்டிடம் அருகில் ரயில் பாதை உள்ளதால் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒட்டு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் எம்எல்ஏவும் செய்து தருவதாக உறுதியளித்தார் அதனைத் தொடர்ந்து குத்தாலத்தில் புதிதாக அமைந்துள்ள ஆத்மாலயா பள்ளியில் மாற்றுத் திறனாளி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு போர்வைகள் நோட்டுப் புத்தகம் பேனா பென்சில் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது இப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் உடன் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
