BREAKING NEWS

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு ஓய்வூதியம், புதிய கல்விக்கொள்கை இரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 10அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராணிப்பேட்டையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு ஓய்வூதியம், புதிய கல்விக்கொள்கை இரத்து செய்ய  கோருதல் உள்ளிட்ட 10அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராணிப்பேட்டையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இராணிப்பேட்டை மாவட்ட கிளையின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளருமான பெ.செ.அமர்நாத் தலைமை தாங்கினார்.

 

தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சி.பார்த்திபன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பா.ஆதவன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் த.மு.பாக்கியராஜ, தமிழ்நாடு ஆரம்பபப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.குணசேகரன் ஆகியோர் கோரிக்கை விளக்கஉரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது. திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பங்கேற்கும் ஓய்வூதிய திட்டதினை(CPS) இரத்து செய்து தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.

தேசிய கல்விக்கொள்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற் வேண்டும் 01.01.2022 முதல் ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 3 சதவிகித அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடன் வழங்கிட வேண்டும் தமிழக அரசு ஆசிரியர்களின் இனைறைய பணிச்சுழலைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

1. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை வ.எண். 309இல் கூறியவாறு தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.

2. தேசியக் கல்விக்கொள்கை -2020ஐ ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

3. (அ) தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் தமிழக அரசால் பறிக்கப்பட்டது. இதனால் 01.06.2009க்குப் பின்பு தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

(ஆ) தமிழகத்தில் 01.06.2009க்குப் பின்பு நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.
4. (அ) 01.01.2022 முதல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 3 சதவிகித அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு னடனே வழங்கிட வேண்டும்
(ஆ) கடந்த ஆசிரயர் பொது மாறுதல் கலந்தாய்வில் கூடுதல் தேவைப்பணியிடங்களுக்குப்பணி மாறுதலிரல் சென்ற ஏராளமான ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காத அவல நிலையை உடனடியாக நீக்க வேண்டும்.

5. பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

6. அசிரியர்களுக்கு உயர்கல்விக்கு முன்பு போல் ஊக்க ஊதிய உர்யவு அனுமதிக்கப்பட வேண்டும்.

 

7. (அ) இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு லட்சக்ணக்கானோர் பல ஆண்டுகளாக்க் காத்திருக்கும் நிலையில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக்குப மூலமாக மதிப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம் செய்யப் போவதாக அறித்துள்ள அரசானையை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று 13,331 காலிப்பணிடங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நிரத்திர பணியிடத்தில் நியமனம் செய்திட வேண்டும்.
(ஆ)தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1000 மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் உடன் நிரப்பிட வேண்டும்.

 

8. அரசு / அரசு உதவி பெறும் / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாகத் தரம் உயர்த்தி அங்கு பணியாற்றும் இடைநிலை ஆசரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வுவழங்கிட வேண்டும்.

 

9. (அ) தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், வேளாண்மை, பொறியில் உள்ளிட்ட உர் படிப்புகளில் 7.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கப்படுவது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 2.5 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அதே போன்று அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அரசு உதவி பெறம் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவு படுத்திட வேண்டும்.

கடந்த காலங்களைப் போல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் பாரபட்சமின்றி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க்கப்பட வேண்டும்.(ஆ) அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்று ஆசிரியர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நியமன ஒப்புதல் வழங்க்க்ப்படவில்லை. இதனால் அவ்வாறு நியமனம் பெற்று பணியில் உள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நியமன ஒப்பு வழங்கப்பட வேண்டும்.

 

10. தமிழக அரசு ஆசிரியர்களின் இன்றை பணிச்சுழலைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )