BREAKING NEWS

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் 120 வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளியின் தாளாளர் M.அய்யாச்சாமி அவர்கள் விழாவை முன்மொழிந்தார். R.வையணப்பெருமாள் தலைவர் மற்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் அவர்கள் தலைமை வகித்தார்.பள்ளியின் நிர்வாகிகள் S.முத்துமுருகன், T. ரவீந்திரன், ஜெயபிரக்காஷ், மற்றும் R.நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு D.துரைப்பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து மாணவர்களை வாழ்த்தி பேசினார். பள்ளியின் முதல்வர் திருமதி.D.அன்புக்கனி மோசஸ் அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார்.L.K.G மாணவர்கள் மாறுவேடம் அணிந்து சிறப்பித்தனர்.

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் மாணவர்கள் சிலம்பம் கலையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )