காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.!ஏஐடியூசி பண்ணை தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்!!

காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணை தொழிலாளர் சங்க கூட்டம் 16~7~22 காலை 11 மணிக்கு வி.வனிதா தலைமையில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி ஏஐடியூசி தொழிற்சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், பண்ணை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.அரசப்பன் , ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி. கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி ரூபாய் 750 ஆக உயர்த்தப்பட வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசையும் , பண்ணை நிர்வாகத்தையும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகளாக தலைவர் வேம்பு, செயலாளர் வி வனிதா, பொருளாளர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் பிரபாகரன், துணைச் செயலாளர் பரிமளா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
