BREAKING NEWS

கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது.

கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது.

கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 34 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து 10க்கு மேற்பட்ட ஊராட்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட தலைவர் திருஞானம்பிள்ளை மாநில செயற்குழு உறுப்பினர் கோதை கேசவன் மாவட்ட துணை செயலாளர் அரங்க நாகப்பன் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன் இளைஞரணி மாவட்டச் செயலாளர் வினோத், உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் கருணாகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட துணைத் தலைவர் பக்கிரி சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்டத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக என்று தேர்தல் அறிக்கை தெரிவித்து ஆண்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கும்பகோணத்தை தனி மாவட்டமாக ஆக்கவில்லை தமிழக அரசு கும்பகோணத்தை புதிய தனி மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி 34 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளும் மற்றும் அனைத்து வாடுகளிலும் கொடியேற்ற வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி ஊராட்சி வார்டுகளிலும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாசை முதலமைச்சராக ஆக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது இதனால் விவசாயம் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் உடனே மாநகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,

அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். பட்டீஸ்வரம் எல்லையம்மன் கோவில் தெரு நீண்ட காலமாக குண்டு குளியுமாக உள்ள சாலையை மாவட்ட நிர்வாகம் சீர் செய்து புதிய சாலை போட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )