BREAKING NEWS

கை,கால்களை அமுக்கி விடு என கறார் உத்தரவு; ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவன்: வைரலான வீடியோ!

கை,கால்களை அமுக்கி விடு என கறார் உத்தரவு; ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவன்: வைரலான வீடியோ!

அரசு பள்ளி ஆசிரியை தனது வகுப்பு மாணவனை அழைத்து கைகளை அமுக்கி மசாஜ் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டம் போகாரியில் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஊர்மிளா சிங் என்பவர் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வகுப்பு மாணவனை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியை ஊர்மிளா சிங்கிற்கு அந்த மாணவன் மசாஜ் செய்தார். அப்போது மற்ற மாணவ, மாணவியர் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஹர்தோய் மாவட்ட கல்வி அதிகாரி சிங் கூறுகையில், “ஆசிரியைக்கு மாணவன் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தான் தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் தற்காலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )