சாதி மற்றும் வகுப்புவாத பிரச்சனைகள் ஏற்படாதவாறும் மற்றும் மது, போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் (பொறுப்பு)G.S.அனிதா மேற்பார்வையில் சந்திப்பு சரக காவல் உதவி ஆணையாளர் அண்ணாதுரை மற்றும் சந்திப்பு காவல் உதவி ஆய்வாளர் தில்லைநாயகம் இணைந்து,

நெல்லை சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாப்டர் மேல் நிலை பள்ளியில் மாணவர்களிடம், சாதி மற்றும் வகுப்புவாத பிரச்சனைகள் ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் மாணவர்கள் சாதி அடையாளங்களை காட்டும் வகையில் கைகளில் பல வண்ணங்களில் கயிறுகளை கட்டக்கூடாது. என்பன குறித்தும் மேலும் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
