தூத்துக்குடி டாஸ்மாக் பார் மூடப்பட நிலையில், 3 லட்சம் பேர் வாழ்வாதரம் பாதிப்பு- பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி!

மதுக்கூட பார் டெண்டர் நேர்மையாக நடைபெற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளரின் பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. பின்னர், இதுகுறித்து பார் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் செய்தியளர்களிடம் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் பார் டெண்டர் நடைபெற்றது.
இதில், முறைகேடு நடைபெற்ற வண்ணம் சில மாதங்கள் பார் நடைபெறாமல் இருந்தது. பின்னர், டாஸ்மாக் நிர்வாகம் மறு டெண்டர் அளிக்க ஒத்துழைப்பு நல்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், 102 கடைகளில் 90 கடைகள் மது கூட உரிமம் இல்லாமல் உள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிமம் இல்லாத 30 மாவட்டங்களில் மறு டெண்டர் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்கு முன்பு வரை அனைத்து மாவட்டங்களிலும் டெண்டர் நேர்மையாக நடைபெற்றது. அதே போல் இப்போதும் நடைபெற வேண்டும்.
மேலும், நடந்து முடிந்த டெண்டரில் முறைகேடாக விண்ணப்ப படிவம் அளிக்காமல் இருந்தனர். இதுகுறித்து நீதிமன்றம் சென்று விண்ணப்ப படிவம் கிடைக்கபெற்றோம். கடந்த முறை நடைபெற்ற டெண்டரில் அமைச்சர் ஆதரவாளர்க்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டனர். இந்த முறை அதுபோன்று நடக்காத வண்ணம் இருக்க வேண்டும். தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய பணம், உரிமம் தொகை நல்ல முறையில் செலுத்தி வருகிறோம். ஆதலால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை.
பார் தொழிலார்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் வாழ்வாதரம் இழந்து தவிக்கின்றனர். 30 மாவட்டத்தில், 80% பார் உரிமம் இன்று வரை இல்லாத சூழ்நிலை உள்ளது. ஆகவே, இந்த டெண்டர் நேர்மையாக நடைபெற வேண்டும். பார் செயல்படாமல் உள்ளதால் ஆங்காங்கே மது அருந்தி வருகின்றனர். இது சட்டம், ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதால் நேர்மையாக டெண்டர் விட வேண்டும். டெண்டர் நேர்மையாகவும், கட்டிட உரிமையாளரின் தடையில்லா சான்று அவசியம் என்பதை உறுதிபடுத்தி செப்டம்பர் 1-ம் தேதி 2022 புதிய உரிமத்தை வழங்கி அரசுக்கு வரவேண்டிய வருவாயை பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.
