BREAKING NEWS

திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் பைக் திருடியவரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் பைக் திருடியவரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் பைக் திருடியவரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கை வழி மறித்து சோதனை நடத்தினர்.

 

 

அதில் உரிய ஆவனங்கள் எதுவும் இல்லை. மேலும் அந்த பைக்கை ஓட்டி வந்தவர் காயல்பட்டினம் உச்சிமகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் முகமது(38). என தெரியவந்தது, மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் அந்த பைக் திருடப்பட்டது எனவும் தெரியவந்தது.

 

இதையடுத்து ஷேக் முகமதுவை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் திருச்செந்தூர் தூத்துக்குடி பகுதிகளில் திருடிய 4 பைக்கை காயல்பட்டினம் சுனாமி நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. ஆக மொத்தத்தில் ஷேக் முகமதுவிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை கோவில் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து சேக் முகமதுவை சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )