BREAKING NEWS

திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அம்பையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அம்பையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை புறநகர் மாவட்டம்: திமுக வின் விடியா அரசின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் தலைமையில் நடைபெற்றது. அம்பை தொகுதி தலைவர் செய்யது வரவேற்புரையாற்றினார்.

 

 

மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித், மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் பத்தமடை சிராஜ், தொழிற் சங்க மாவட்ட தலைவர் அபுல்ஹசன், தொகுதி செயலாளர் சிந்தா கொடி விம்ன் மாவட்ட துணை தலைவி பீர்பாத்து தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சாகுல், அம்பை தொகுதி துணை தலைவர் ரகுநாதன், விம்ன் செயற்குழு உறுப்பினர் ஷாஜிதா, நர்கிஸ் பானு, ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

 

 

வர்த்தகர் அணியின் மாநில பொதுச்செயலாளர் ஜாபர்அலி உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் இம்ரான் அலி , எஸ்டிபிஐ கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் பீர்மாஸ்தான், பொதுச் செயலாளர் களந்தை மீராசா, வழக்கறிஞர் முகம்மது ஷபி, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில் ஆகியோர கண்டன உரை இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் பிரசன்னா, இனை செயலாளர் பவுன் ராஜ் நிகழத்தினர்.

 

 

இதில் அம்பை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய சட்டமன்றத்தில் உள்ள தொகுதி நகர, கிளை நிர்வகிகள், ஜமாத்தர்கள், பொதுமக்கள், என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுகவின் வின்னை முட்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இறுதியாக தொகுதி செயலாளர் சிந்தா கொடி நன்றியுரையாற்றினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )