BREAKING NEWS

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதியதில் வேன் கவிழ்ந்தது. 10க்கும் மேற்பட்டோர் காயம்.

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதியதில் வேன் கவிழ்ந்தது. 10க்கும் மேற்பட்டோர் காயம்.

தூத்துக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த பீட்டர்,வசந்தி என்பவர் தனது குடும்பத்தினர் உறவினர்கள் சுமார் 20 பேர் வேன் மூலம் திருச்செந்தூர் அருகில் உள்ள மனப்பாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் வேன் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் உள்ள குலசேகரபட்டினம் உடன்குடி சந்திப்பு அருகே சென்றபோது உடன்குடியில் இருந்து குலசேகரபட்டினம் நோக்கி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் என்று பலகை பொருந்திய இன்னோவா கார் வேன் மீது மோதியது இதனையடுத்து வேன் தலைகீழாக கவிழ்ந்து. தொடர்ந்து கார் மற்றும் வேனில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்தது. அருகில் இருந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலை யாகும் சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முதல் மணப்பாடு வரையிலான சாலை விரிவாக்கம் மற்றும் சீரைமக்கும் பணி நடைபெற்றது. குலசேகரபட்டினம், உடன்குடி மற்றும் கன்னியாகுமரி- திருச்செந்தூர் சாலை ஆகிய நான்கு சாலை சந்திப்பில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது சாலை சீரமைப்பு காரணமாக அகற்றப்பட்டது. மீண்டும் தடுப்புகள் அமைக்காதது தான் இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )