நிலக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா.

செய்தியாளர் ம.ராஜா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் மாலை அணிவித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவரும்,நகர செயலாளருமான சேகர், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மூர்த்தி,
முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், நகர பொருளாளர் பூக்கடை சரவணன், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் முனியப்பன் மற்றும் அதிமுகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
