மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்.
திருமதி வே.லதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் செய்தி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(19.09.2022) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும்,
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும்,
வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 247 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தகுதியுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திருமதி ம.காசிசெல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
