நத்தம்- தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.

திண்டுக்கல் மாவட்டம்,
நத்தம்- தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.
அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நத்தத்தில் நடந்தது. இதற்கு நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், சின்னு, சுப்பிரமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் பிறவிக்கவுண்டர் வரவேற்றார்.கூட்டத்தில் கழக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசுகையில்,.
நீண்ட இடைவெளி மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக நத்தம் தொகுதி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம்.
இப்பொழுது தேர்தல் வந்தால் அ.தி.மு.க. 200 இடங்களை பிடித்து மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி எடப்பாடி தலைமையில் அமையப்போகிறது.
நத்தத்தில் அரசு கல்லூரி அமைக்க 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கு அரசு அனுமதி கொடுத்தால் எனது சொந்த நிலத்தை கூட வழங்குவதற்கு தயாராக உள்ளேன். இவ்வாறு நத்தம் விசுவநாதன் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நகர் பேரவை செயலாளர் சேக்தாவூது, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி,
நகர அவைத்தலைவர் சேக்ஷஒலி, பொருளாளர் சீனிவாசன், உலுப்பகுடி பால்பண்ணை தலைவர் சக்திவேல், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் குப்பான், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராமமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், சிவா, பழனிகுமார்,
மீனாட்சிபுரம் கிளை நிர்வாகிகள் வேலு, மாரிமுத்து, செந்தில்குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
