BREAKING NEWS

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!

 

 

திருப்பூர், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவர் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள நல்லூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வாசித்து வருகிறார் இவர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்துள்ளார்.

 

 

அவரிடம் சுமார் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வாரத்தவணை முறையில் 200, 500 ரூபாய் வீதம் பலகார சீட்டு கட்டி வந்துள்ளனர் மேலும் 50 ஆயிரம் ஒரு லட்சம் என ஏலச்சீட்டிலும் பணம் செலுத்தியுள்ளனர்.

 

 

தீபாவளி நெருங்கி வரும் சூழ்நிலையில் பாண்டுரங்கனிடம் சீட்டு கட்டிய வாடிக்கையாளர்களுக்கு சீட்டு முதிர்வு தொகையை திருப்பி த்தராமல் பாண்டுரங்கன் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தினர்.

 

 

அதில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்திய பாண்டுரங்கன் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை தொகை வசூலித்து விட்டு முதிர்வழிந்த நிலையில் திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்பட்டுள்ளது.

 

 

போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )